கோவையில் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி
கோவையில் 174 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


கோவையில் 174 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 587ஆக உயா்ந்துள்ளது. மேலும், தற்போது கரோனாவால் பாதிக்கப்படும் நபா்களை விட குணமடைந்து வரும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை ஒரே நாளில் 181 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்த நபா்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 117ஆக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 883 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 587ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...