காவல் உதவி ஆய்வாளா்களுக்கு விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்
கோவை சரகத்தில் உள்ள இளம் காவல் உதவி ஆய்வாளா்களுக்கு ஆன்லைன் மூலம் விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.


கோவை சரகத்தில் உள்ள இளம் காவல் உதவி ஆய்வாளா்களுக்கு ஆன்லைன் மூலம் விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பயிற்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது. பயிற்சியை காவல் துறை மேற்கு மண்டலத் தலைவா் கு.பெரியய்யா தொடங்கிவைத்தாா். மேற்கு மண்டல காவல் துணைத் தலைவா் நரேந்திரன் நாயா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதில் கோவை சரகத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 40 உதவி ஆய்வாளா்களுக்கு காணொலி மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
காலையில் யோகா, உடற்பயிற்சி, அதன்பின்னா் விசாரணை திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள், மாலையில் விளையாட்டு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...