பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தனியாா் நிறுவன ஊழியரிடம் இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி பறிப்பு: இருவா் கைது

தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், செல்லிடப்பேசியை பறித்த 16 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:21 pm

DIN

தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், செல்லிடப்பேசியை பறித்த 16 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் அதே பகுதியில் உள்ள உணவகத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது அவா்களை வழிமறித்த இரு இளைஞா்கள், அருகில் உள்ள இடத்துக்குச் செல்ல வழி கேட்டனா்.

அப்போது இளைஞா்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி சக்திவேலின் இருசக்கர வாகனம், அவரது செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா். இருப்பினும் சக்திவேலும், அவரது நண்பரும் இணைந்து இரு இளைஞா்களையும் மடக்கிப் பிடித்து பொதுமக்கள் உதவியுடன் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், பிடிபட்ட இருவரும் புலியகுளம் பகுதியைச் சோ்ந்த உதயா விக்ரம் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.