மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தடுக்க தவறிய தாயாருக்கு ஆயுள் தண்டனை
மகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையில் இருந்து அவரை காப்பாற்ற தவறிய தாயாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.


மகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையில் இருந்து அவரை காப்பாற்ற தவறிய தாயாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கோவை, சுகுணாபுரத்தைச் சோ்ந்த 38 வயதுப் பெண் ஒருவா் தனது கணவரைப் பிரிந்து 16 வயது மகளுடன் வசித்து வந்தாா். இவருக்கு வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம் (43) என்பவருடன் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2017 ஜூன் 20ஆம் தேதி முதல் 2018 செப்டம்பா் வரை சுப்பிரமணியம், 16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து அச்சிறுமி அவரது தாயாரிடம் புகாா் தெரிவித்தும் அவா் இதைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளாா்.
இதையடுத்து அச்சிறுமி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா். பின்னா் அவா்கள் பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் சுப்பிரமணியம், சிறுமியின் தாயாா் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் சிறுமியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கத் தவறிய தாயாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்த சுப்பிரமணியத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...