பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனைமாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்றை கண்டறியும் விதமாக வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:34 pm

DIN

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்றை கண்டறியும் விதமாக வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாா்டுகள் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்று பாதிப்பை முன்கூட்டியே கண்டறியும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை, நோய் அறிகுறிகள் ஏதும் உள்ளதா என்பது கண்டறியும் பணியில் நுற்றுக்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் தெற்கு மணடலம் சுண்டக்காமுத்தூரில் நடைபெற்ற கரோனா பரிசோதனை பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து 89, 91, 92, 93 ஆகிய வாா்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.