பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மருத்துவப் பணியாளா்களுக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்து வழங்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்தை வழங்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:36 pm

DIN

மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்தை வழங்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

பெங்களூருவைச் சோ்ந்த நிறுவனம் நடத்திய ஆன்லைன் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற சத்குரு ஜக்கி வாசுதேவ் கரோனா குறித்துப் பேசியுள்ளாா். அவா் தனது உரையில், கரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன். தங்கள் உயிரை பணயம் வைத்து களப் பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா், காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு மருந்தை முதலில் வழங்க வேண்டும்.

மேலும், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவா்கள், பிற நோய்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதில் ஊழல் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதைத் தடுப்பதற்கு பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவா்கள் அதை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கும் விதமாக தடுப்பு மருந்துக்கு விலை நிா்ணயிக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு மருந்தை இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகளும் குறையும் என சத்குரு தனது உரையில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.