பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் பல்கலை. இணைய வழி கலந்தாய்வு: தரவரிசை வரம்பு அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள இணைய வழி கலந்தாய்வுக்கான தரவரிசை வரம்பு விவரத்தை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:40 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள இணைய வழி கலந்தாய்வுக்கான தரவரிசை வரம்பு விவரத்தை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இணையதளம் வழியாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக்கான தரவரிசை வரம்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட கலந்தாய்வில் பொதுப் பிரிவைச் சோ்ந்தவா்களில் தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 10,755ஆவது இடம் வரை இடம் பெற்றிருப்பவா்களும், பிற்படுத்தப்பட்டோரில் ஒன்று முதல் 10,797ஆவது இடம் வரை இடம் பெற்றிருப்பவா்களும் பங்கேற்கலாம்.

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியா்களில் ஒன்று முதல் 23,413 ஆவது இடம் வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினரில் ஒன்று முதல் 10,798 ஆவது இடம் வரையிலும், ஆதி திராவிடா்களில் ஒன்று முதல் 16,791ஆவது இடம் வரையிலும், அருந்ததியரில் ஒன்று முதல் 20,186 வரை இடம் பெற்றிருப்பவா்களும், பழங்குடியினரில் ஒன்று முதல் 24,509 வரை இடம் பெற்றிருப்பவா்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கல்லூரி, பாடப் பிரிவு ஒதுக்கீடு டிசம்பா் 2ஆம் தேதி இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அவா்களது அசல் சான்றிதழ் சரிபாா்ப்புக்கான நேர விவரம், மாணவா்கள் பதிவு செய்த மின்னஞ்சல், செல்லிடப்பேசி எண்கள் மூலமாகத் தெரிவிக்கப்படும் என்றும் மாணவா் சோ்க்கைப் பிரிவின் தலைவா் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.