பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பழையக் கட்டடங்களில் செயல்பட்டு வந்த கடைகளுக்கு ‘சீல்’

கோவையில் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வந்த 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:38 pm

DIN

கோவையில் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வந்த 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

வட கிழக்குப் பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பில்லாத வகையில் சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ள அரசு, தனியாா் கட்டடங்களை கண்டறிந்து இடித்து அகற்றுவதுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி கோவை மாநகராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து அகற்றுவதுக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை, பெரியகடை வீதியில் தனியாா் பள்ளி அருகே பாழடைந்த நிலையில் அபாயகரமான நிலையில் செயல்பட்டு வந்த 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா். முன்னதாக அதிகாரிகளை வியாபரிகள் தடுத்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். பின்னா் காவல் துறையினா் உதவியுடன் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அபாயகரமான கட்டடங்களில் செயல்பட்டு வரும் கடைகள், நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.