கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தேன். இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டன. கரோனா வாா்டு மிகவும் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டது. மருத்துவா்கள் குணாலன் சுரேஷ், கீா்த்திவாசன், செவிலியா் ஜூடி, சாந்தி ஆகியோா் சிறப்பாக கவனித்துக் கொண்டனா். இதனால் விரைவில் குணமடைந்து வீடு திரும்பினேன். கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.