பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாஜக வேல் யாத்திரை குழுவினருக்கு பொள்ளாச்சியில் வரவேற்பு

கோவையில் இருந்து பழனி சென்ற வேல் யாத்திரைக்கு பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவினா் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:39 pm

DIN

கோவையில் இருந்து பழனி சென்ற வேல் யாத்திரைக்கு பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவினா் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளா் நரேந்திரன், மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன் ஆகியோா் வேல் யாத்திரையாக வந்தனா். அவா்களுக்கு பொள்ளாச்சி, காந்தி சிலை அருகே தெற்கு மாவட்டத் தலைவா் வசந்தராஜன், பொதுச் செயலாளா்கள் ஆனந்த், அப்பு, நிா்வாகிகள் கோவிந்தராஜ், துரை, சிவகுமாா், தனபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

34 போ் கைது: பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிடா் பண்பாட்டுக் கூட்டியக்கத்தினா் திரண்டு பெரியாா் கைத்தடி ஊா்வலம் சென்றனா். தமிழ்நாடு திராவிடா் கழக ஒருங்கிணைப்பாளா் காசு.நாகராசன் தலைமை வகித்தாா். திராவிடா் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினா் இரா.மோகன், திராவிடா் கழக பொதுக்குழு உறுப்பினா் தி.பரமசிவம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொறுப்பாளா் பாரதி, திராவிடத் தமிழா் கட்சியின் தலைமை நிலையச் செயலாளா் ஆதித்தமிழன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் கம்பா்,

ஆதித்தமிழா் பேரவையின் வானுகன், தமிழ்நாடு மாணவா் மன்றம் சாா்பில் சிகான், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதையடுத்து ஊா்வலம் சென்ற 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாஜகவினா் மீது வழக்கு: நீதிமன்ற உத்தரவை மீறி கோவை, சிவானந்தா காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வேல் யாத்திரை பொதுக் கூட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மகளிா் அணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன், இளைஞா் அணித் தலைவா் வினோத் செல்வம், மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், துணைத் தலைவா் அண்ணாமலை உள்பட 300க்கும் மேற்பட்டோா் மீது ரத்தினபுரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.