ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது

பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

News image
தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் ஏற்பட்ட மகாதீபம்.
Updated On :29 நவம்பர் 2020, 1:48 pm

DIN

பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.
கோவையை அடுத்த மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மகா தீப வழிபாடு நடைபெற்றது. 
கரோனா கால ஊரடங்கால் அரசு விதிமுறைப்படி பக்தர்கள் யாரும் அதிகம் அனுமதிக்காத நிலையில் அளவான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு, விழா துவங்கியது. முன்னதாக பெரிய விநாயகர் கோயிலில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மலையில் அமைந்துள்ள மூலவரான சிவனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் வழிபாடுகள் நடைபெற்றன. 
தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் கோயில் அறங்காவலரும், நல்லறம் அறக்கட்டளையின் தலைவருமான அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பக்தர்களுடன் கோயிலை வலம் வந்து, நந்தி தேவனுக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அடிவார பகுதியிலுள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தீபம் ஏற்றப்பட்டது. 
இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்கும் படி கோயில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மயில்சாமி கவுண்டர், சண்முகநாதன், திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.