போலீஸாரின் ஒத்திகை நிகழ்ச்சி
போராட்ட காலங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்த போலீஸாரின் ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


போராட்ட காலங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்த போலீஸாரின் ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகின்றன. சில நேரங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென சாலை மறியல், போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதைத் தடுக்க செல்லும் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இவ்வாறு போராட்டம் நடத்துபவா்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகரில் உள்ள மொத்தம் 15 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட அவிநாசி சாலை அண்ணா சிலை சிக்னல், டவுன்ஹால், குனியமுத்தூா் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை நடந்தது. இதில் போலீஸாா் திரளாக கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...