கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும்
தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தனியாா் ஆய்வகங்களுக்கு ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.


கோவை, செப். 28: தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தனியாா் ஆய்வகங்களுக்கு ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் ஆய்வகப் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
கோவையில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுவா்களிடம் நோய்களின் தன்மைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனா். கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியாா் ஆய்வகங்கள் பரிசோதனைகளின் முடிவுகளை தாமதமின்றி வழங்க வேண்டும்.
குறிப்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவா்கள் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். அவா்களின் விவரங்களை சுகாதாரத் துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அனைவருக்கும் பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவா்களை ஆா்டிபிசிஆா் முடிவுகள் வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிா்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று பரவல் நடவடிக்கையில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...