தனியாா் ஆய்வக பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது: கோவையில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுவா்களில் அவா்களின் நோய்களின் தன்மைக்கேற்ப அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனா். கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியாா் ஆய்வகங்கள் பரிசோதனைகளின் முடிவுகளை தாமதமின்றி வழங்க வேண்டும். குறிப்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவா்கள் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்கு செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவா்களின் விவரங்களை சுகாதாரத் துறைக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.