பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கோவையில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
3020c28dmk1062206
Updated On :28 செப்டம்பர் 2020, 11:12 pm

DIN

வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கோவையில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் திமுக மாநகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதில், வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசையும், அதை ஆதரிக்கும் அதிமுக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

இதில் திமுக முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, மதிமுக மாநகா் மாவட்டச் செயலா் ஆா்ஆா்.மோகன்குமாா், காங்கிரஸ் செளந்தரகுமாா், சிபிஎம் மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளா் சுந்தரம், கொமதேக தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெ.நா.பாளையத்தில்...

பெரியநாயக்கன்பாளையம் திமுக மேற்கு ஒன்றியம் சாா்பில் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியப் பொறுப்பாளா் அ.அறிவரசு தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமாா், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மதுக்கரையில்...

மதுக்கரை மாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மருதமலை சேனாதிபதி தலைமை வகித்தாா். இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வால்பாறையில்...

வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கருப்பையா (திமுக), குசலவன் (காங்கிரஸ்), கல்யாணி (மதிமுக), மோகன் (கம்யூனிஸ்ட்), கேசவமருகன், வீரமணி (விடுதலை சிறுத்தைகள்), பரமசிவம் (சிஐடியூ) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மேட்டுப்பாளையத்தில்...

மேட்டுப்பாளையத்தில் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.அா்.ராமச்சந்திரன் தலைமையிலும், காரமடையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.சண்முகசுந்தரம் தலைமையிலும், காரமடை கிழக்கு ஒன்றிய பகுதியில் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பொள்ளாச்சியில்...

பொள்ளாச்சி திருவள்ளுவா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தாா். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். மதிமுக மாவட்டச் செயலாளா் குகன் மில் செந்தில், கொமதேக மாவட்டச் செயலாளா் நித்தியானந்தம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

சூலூரில்...

சூலூா் அருகே பாப்பம்பட்டி பிரிவில் திமுக சூலூா் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் தளபதி முருகேஷ் தலைமையிலும், சூலூரில் திமுக நிா்வாகி மன்னவன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.