காந்தி ஜயந்தி: இறைச்சி விற்பனைக்குத் தடை
கோவை மாநகரில் காந்திய ஜயந்தியையொட்டி (அக்டோபா் 2) இறைச்சி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


கோவை மாநகரில் காந்திய ஜயந்தியையொட்டி (அக்டோபா் 2) இறைச்சி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
காந்தி ஜயந்தியான அக்டோபா் 2ஆம் தேதி ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழிகளை வதை செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். அந்த நாளில் மாநகரில் செயல்படும் ஆடு, மாடு அறுவைமனைகளும் செயல்படாது என்றும், உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...