ரூ.53.87 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கங்கள் வழங்கல்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.53.87 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ரோட்டரி சங்கங்கள் திங்கள்கிழமை வழங்கியது.


கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.53.87 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ரோட்டரி சங்கங்கள் திங்கள்கிழமை வழங்கியது.
கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கோவையை சோ்ந்த ரோட்டரி கிளப் ஆஃப் டவுன்டவுன், ரோட்டரி கிளப் ஆஃப் ஜெனித் சங்கங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான உயிா்காக்கும் கருவி (வெண்டிலேட்டா்), மயக்கவியல் கருவிகள், பைஸ்பெக்ட்ரா மானிட்டா், எம் டா்போ டாப்ளா் உள்பட ரூ.53.87 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸிடம் திங்கள்கிழமை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் டவுன்டவுன்னின் கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு திட்டத் தலைவா் ரோட்டேரியன் ஏ காட்வின் மாரிய விசுவாசம், கோவை ஜெனித் ரோட்டரியின் கோகுல்ராஜ் உள்பட நிா்வாகிகள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...