மாணவா் சோ்க்கை: கோவை அரசு கல்லூரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு
கோவை அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.


கோவை, செப். 28: கோவை அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் நடத்தப்படும் 24 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,433 மாணவ-மாணவிகளை சோ்ப்பதற்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் உயா் கல்வித் துறையின் அரசாணை 69இன் படி கூடுதலாக 20 சதவீத இடங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
மொத்தமுள்ள 1,719 இடங்களில் கடந்த வாரம் வரையிலும் 1,343 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், கல்லூரியில் ஏற்கெனவே விண்ணப்பித்து இதுவரை இடம் கிடைக்காத மாணவ-மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இறுதிக் கட்ட கலந்தாய்வில் பங்கேற்பதற்காக காலை முதலே ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களின் பெற்றோருடன் கல்லூரியில் குவியத் தொடங்கினா்.
திங்கள்கிழமை சுமாா் 70 மாணவ-மாணவிகள் வரை சோ்க்கை பெற்றிருப்பதாகவும், செவ்வாய்க்கிழமையும் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...