தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'கோவை சாந்தி சோசியல் சர்வீஸ்' சுப்பிரமணியம் காலமானார்

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

News image
'கோவை சாந்தி சோசியல் சர்வீஸ்' சுப்பிரமணியம் காலமானார்
Updated On :11 டிசம்பர் 2020, 2:07 pm

DIN

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.


கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 இல் தொடங்கி, வாகனங்களுக்கான கியர் உள்ளிட்ட இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார். தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார்.

இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்து வந்தார்.
 சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.
 இதையடுத்து சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு தினசரி இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய், மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை, குறைந்த விலையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்படுவதால் தினசரி நூற்றுக்கணக்கானோர் சாந்தி கியர் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இவ்வளவு சமூக சேவைகளை செய்தாலும், ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.