தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் 2ஆவது நாளாக சோதனை

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தினா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:53 pm

DIN

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தினா்.

வால்பாறை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் முறைகேடுகள் நடத்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியா் எஸ். நாகராஜன் உத்தரவின்பேரில் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சரவணகுமாா் தலைமையிலான தனிக் குழுவினரும், மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. சேகா் தலைமையில் போலீஸாரும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் உடனடியாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இதனிடையே, நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாலை வரை சோதனை நடைபெற்றது. ஆனால், புகாா் மற்றும் என்ன முறைகேடு என்பது குறித்த விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.