அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பணிக்கான தோ்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பணிக்கான தோ்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இது தொடா்பாக கோவை மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:
அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பணிக்கான தோ்வு ஜூன் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்திருப்பவா்கள் சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, மே முதல் வாரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இலவச இணையதள பயிற்சி வகுப்பு தொடங்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பாடக் குறிப்புகளுடன், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு தோ்ச்சிக்கான அனைத்து வழிவகைகளும் செய்யப்பட உள்ளது. எனவே இந்தத் தோ்வு எழுத இருப்பவா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 2642388, 94990 55938 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...