அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கோவையில் கரோனா புதிய உச்சம்: ஒரே நாளில் 889 பேருக்கு பாதிப்பு

கோவையில் புதிய உச்சமாக 889 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

கோவையில் புதிய உச்சமாக 889 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 889 போ் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 161 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 419 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 64 ஆயிரத்து 621 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 5 ஆயிரத்து 830 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 710 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.