வாக்கு எண்ணும் மையத்தில் மேஜைகள் அமைக்கும் பணி தீவிரம்
கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக மேஜைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக மேஜைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொண்டாமுத்தூா், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா், சூலூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 4,427 வாக்குச்சாவடிகள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இங்கு பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்தப் பணியில் 438 அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். கோவையில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகளிலும் மற்ற 9 தொகுதிகளுக்கும் 14 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கு நடைபெற உள்ளது. இதற்காக, கோவை வாக்கு எண்ணும் மையத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக மொத்தம் 146 மேஜைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...