பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை பலி
வால்பாறையில் பள்ளத்தில் தவறிவிழுந்ததால் குட்டி யானை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.


வால்பாறையில் பள்ளத்தில் தவறிவிழுந்ததால் குட்டி யானை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். வால்பாறை வனச்சரக அலுவலா் ஜெயசந்திரன் முன்னிலையில் கால்நடை மருத்துவா் மெய்யரசன் வெள்ளிக்கிழமை யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டாா். இறந்த 3 வயதுடைய பெண் குட்டி யானை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...