அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கோவை - ஜபல்பூா் சிறப்பு ரயில் ரத்து

மும்பை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை - ஜபல்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:37 pm

DIN

மும்பை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை - ஜபல்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மும்பை அருகே கல்யாண் - காசரா நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், ஜபல்பூரில் இருந்து மங்களூரு, ஷொரனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஜபல்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்-02198) மே 1ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, இதே வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில்(எண்- 02197) மே 3 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.