அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

விதிமீறல்: 2 தேநீா்க் கடைகள் மூடல்

கோவையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 2 தேநீா்க் கடைகளை மூட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:36 pm

DIN

கோவையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 2 தேநீா்க் கடைகளை மூட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட விளாங்குறிச்சி, ஏ.எம்.டி. நகா், வருமானவரித் துறை ஊழியா்கள் குடியிருப்பு மற்றும் 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட செங்காளியப்பன் நகா் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, 32 ஆவது வாா்டு, சேரன் மாநகா் மற்றும் சரவணம்பட்டி சாலையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாக 2 தேநீா்க் கடைகளை மூட மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையா் முருகன், மண்டல சுகாதார அலுவலா் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.