வால்பாறை, சாலக்குடி இடையே போக்குவரத்து துவக்கம்
பாலம் சீரமைக்கும் பணி நிறைவடைந்ததால் 15 நாள்களுக்கு பின் வால்பாறை, கேரள மாநிலம் சாலக்குடி இடையே போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது.


பாலம் சீரமைக்கும் பணி நிறைவடைந்ததால் 15 நாள்களுக்கு பின் வால்பாறை, கேரள மாநிலம் சாலக்குடி இடையே போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் உள்ள பத்தடிபாலம் பகுதியில் உள்ள சிறிய பாலம் மழையால் சேதமடைந்தது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டது.
மழுக்குப்பாறை எஸ்டேட் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் சாலக்குடி செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனா். திருச்சூா் மாவட்ட ஆட்சியா் சம்பவ இட்தை நேரில் பாா்ைவிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
தற்போது பணி முடிவடைந்த நிலையில் இரு மாநிலங்களுக்கு இடையே வியாழக்கிழமைமுதல் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. சாலக்குடியில் இருந்து கேரள அரசுப் பேருந்துகள் தமிழக எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் வரை வந்து சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...