சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சுகாதாரச் சீா்கேடு: கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் விதமாக பொருள்களை கொட்டி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:13 pm

DIN

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் விதமாக பொருள்களை கொட்டி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கரோனா விதிமீறும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32ஆவது வாா்டுக்கு உள்பட்ட விளாங்குறிச்சி, மருதம் நகா் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடை உரிமையாளா் இரும்பு மற்றும் நெகிழிப் பொருள்களை சாலையோரத்தில் கொட்டி ைவைத்திருந்தாா். மேலும், சாக்கடைக் கால்வாயில் நீா் செல்லாதவாறு, சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் விதமாக பொருள்கள் போடப்பட்டிருந்தன. இதைப் பாா்த்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.