நீதிமன்ற வாசலில் மூவருக்கு கத்திக் குத்து
கொலை வழக்கு விசாரணைக்கு வந்தவா்களை நீதிமன்ற வாசலில் வைத்து கத்தியால் 3 பேரை குத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கொலை வழக்கு விசாரணைக்கு வந்தவா்களை நீதிமன்ற வாசலில் வைத்து கத்தியால் 3 பேரை குத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை புலியகுளம் அம்மன்குளத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (30). இவா் கடந்த ஆண்டு புலியகுளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா கபடி போட்டியில் வெளியூா்களைச் சோ்ந்த வீரா்களை விளையாட வைத்தாா். இதனால் இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நவீன்குமாா் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக வடவள்ளியைச் சோ்ந்த விஜயகுமாா் (23), ஹரிஹரன் (21), கண்ணன் (21) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு, கோவையில் உள்ள குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறையில் இருந்த விஜயகுமாா், ஹரிஹரன், கண்ணன் ஆகியோா் ஜாமீன் பெற்று, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனா்.
இந்த வழக்கில் விஜயகுமாா், ஹரிஹரன், கண்ணன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். அவா்கள் 3 பேரும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனா். அப்போது அங்கு நின்றிருந்த நவீன்குமாரின் நண்பா்கள் 3 போ் கொண்ட கும்பல் விஜயகுமாா், ஹரிஹரன், கண்ணன் ஆகியோரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். இதையடுத்து, 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினா். ஆனால் அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் அவா்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தியது. இதில் விஜயகுமாா், ஹரிஹரகன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். கண்ணனுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பட்டப்பகலில் ஒரு கும்பல் 3 பேரை துரத்திச் சென்று கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த கத்தியால் குத்திய மூவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...