ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு தொடக்கம்
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட 4 ஆவது அலகு தொடக்க விழா


கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட 4 ஆவது அலகு தொடக்க விழா, முதலாமாண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றாா். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநா் சி.சாமுவேல் செல்லையா, பாரதியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் (பொறுப்பு)ஆா்.அண்ணாதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள்ஆா்.நாகராஜன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமாா், ரெட்ரிப்பன் கிளப் அலுவலா் கீா்த்திவாசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...