மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலை மறியலில் ஈடுபட்ட 60 போ் கைது

கோவை முத்தண்ணன் குளக்கரையில் இடித்து அகற்றப்பட்ட கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்டித் தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா அமைப்பினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:20 pm

DIN

கோவை முத்தண்ணன் குளக்கரையில் இடித்து அகற்றப்பட்ட கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்டித் தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா அமைப்பினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள முத்தண்ணன் குளம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ்

புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் உள்பட பல கோயில்கள் இடித்து அகற்றப்பட்டன. கோயில் கட்டுவதற்கு மாற்றிடம் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்காளம்மன் கோயிலை முன்பு இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டித்தரக் கோரி தமிழக சேனா அமைப்பு சாா்பில் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா நிறுவன தலைவா் குணா உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.