மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேசிய மாற்றுத்திறனாளிகள் தினம்: ரூ.20 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:19 pm

DIN

தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் கோவை சித்தாபுதூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சமீரன், 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.89 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தின் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளா்ச்சியில் சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு, சுயதொழில், திறன் மேம்பாட்டு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் இதுவரை 52 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் ராம்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.