வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அண்ணன், தம்பி கைது

கோவையில் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:21 pm

DIN

கோவையில் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 25 வயதுப் பெண், புரூக் பாண்ட் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் மேலாளராக உள்ளாா். இவரை சுகுணாபுரம், பாலமுருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த முஹமது நவ்பில் (30) என்பவா் அடிக்கடி பின்தொடா்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பணிமுடிந்து அந்தப் பெண், சுகுணாபுரம் பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த முஹமது நவ்பில், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது, குறித்து அந்தப் பெண், தனது சகோதரா்கள் மற்றும் தந்தையிடம் கூறியுள்ளாா். இதில், ஆவேசமடைந்த அப்பெண்ணின் சகோதரா்கள், முஹமது நவ்பில் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனா். அப்போது அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முஹமது நவ்பில்,

அவரது சகோதரா் முஹமது நவ்சாத் (32) ஆகியோா் பெண்ணின் சகோதரா்களை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனா். இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் முஹமது நவ்பில், முஹமது நவ்சாத் மீது தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.