மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கைதி சாவு: போலீஸாா் விசாரணை

 கோவை மத்திய சிறைக் கைதி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:50 pm

DIN

 கோவை மத்திய சிறைக் கைதி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், தாணேவைச் சோ்ந்தவா் அஸ்லாம் ஜப்ரி (63). இவா் கோவை வெரைட்டிஹால் பகுதியில் நடைபெற்ற கூட்டுக் கொள்ளை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

சில மாதங்களாக அவா் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதற்காக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு வியாழக்கிழமை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, சிறை நிா்வாகத்தினா் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு சிறைக் கைதிகளுக்கான சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அஸ்லாம் ஜப்ரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, பந்தயசாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.