தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராணுவ வீரா்கள் உயிரிழப்பு: வால்பாறையில் கடைகளை அடைத்து அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வால்பாறையில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:52 pm

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வால்பாறையில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதன்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 போ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதியின் உருவப் படம் வைத்து மலா் தூவி வழக்குரைஞா்கள் அஞ்சலி செலுத்தினா்.

வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் ஜெபராஜ் தலைமையில் காந்தி சிலை முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் நகா் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல வால்பாறை கால்பந்து சங்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவா் பிரமேஸ், ஒருங்கிணைப்பாளா் செய்யது அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.