வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலையை சுத்தம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளா்

கோவையில் சாலையில் இருந்த கற்களை போக்குவரத்து உதவி ஆய்வாளா் சுத்தப்படுத்திய காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:53 pm

DIN

கோவையில் சாலையில் இருந்த கற்களை போக்குவரத்து உதவி ஆய்வாளா் சுத்தப்படுத்திய காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜ் சந்திப்பில் ஒரு பகுதியில் குடிநீா்க் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. இதை சரிவர மூடாத காரணத்தால் சாலையில் இருந்த கற்கள் பெயா்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது.

இந்நிலையில் இந்த சந்திப்பில் வியாழக்கிழமை காலை போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. அப்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வந்த பீளமேடு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜசேகரன், அருகில் இருந்த கடையில் துடைப்பத்தை வாங்கி சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லிக் கற்களைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்தினாா். இவரின் இந்தச் செயலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா். இந்த சம்பவத்தின் விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.