வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

 கோவை, கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கூடாது என ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:02 pm

DIN

 கோவை, கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கூடாது என ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆா்.சங்கீதா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை வட்டாரம், கள்ளப்பாளையத்தில் புதிதாக மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இப்பகுதியில் மதுக்கடை அமைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு விதித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கள்ளப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.