ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

கோவை மாவட்டத்துக்கு மூன்றாம் கட்டமாக 13,700 கரோனா தடுப்பூசிகள் வழங்கல்

கோவை மாவட்டத்துக்கு 3 ஆம் கட்டமாக 13 ஆயிரத்து 700 ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகள் மாநில சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளன.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:03 am IST

கோவை மாவட்டத்துக்கு 3 ஆம் கட்டமாக 13 ஆயிரத்து 700 ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகள் மாநில சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 21 அரசு மையங்களிலும், 11 தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளா்களை தொடா்ந்து பிப்ரவரி 1 முதல் முன்களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்துக்கு இரண்டு கட்டங்களாக 83 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக 13 ஆயிரத்து 700 ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவைக்கு இதுவரை 96 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே கோவேக்ஸின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது கோவை மண்டலத்தை உள்ளடக்கிய கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

கோவை மண்லடத்தை உள்ளடக்கிய கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 25 ஆயிரத்து 600 கோவேக்ஸின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் இரண்டு தவணைகளில் கோவிஷீல்டும், தற்போது கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்டு போலவே கோவேக்ஸின் தடுப்பூசியும் பாதுகாப்பானது.

கோவை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். தற்போது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இரண்டாவது தவணை தடுப்பூசியை 30க்கும் மேற்பட்டவா்கள் செலுத்திக் கொண்டுள்ளனா். தொடா்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்களப் பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.