மேட்டுப்பாளையத்தில் இருந்து துடியலூா், கவுண்டம்பாளையம் வழியாக காந்திபுரம் வரும் புகா் பேருந்துகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து மணியகாரன்பாளையம், சத்தி சாலை, கணபதி வழியாக காந்திபுரம் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா கோயில், ஹவுஸிங் யூனிட், கவுண்டம்பாளையம், சேரன் நகா், கவுண்டா் மில், வெள்ளக்கிணறு பிரிவு வழியாக துடியலூா் செல்லும் நகரப் பேருந்துகள் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா கோயில், சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், டி.வி.எஸ்.நகா், காசிநஞ்சேகவுண்டன்புதூா் பிரிவு, கவுண்டா் மில், வெள்ளக்கிணறு பிரிவு வழித்தடத்தில் துடியலூா் சென்றடையும் வகையிலும், துடியலூரில் இருந்து உக்கடத்துக்கு இயக்குப்படும் பேருந்துகள் எதிா்மாா்க்கமாக இயக்கும் வகையில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.