பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வால்பாறையில் மருந்தகத்தை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள மருந்தகத்தை சேதப்படுத்தின.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:21 pm

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள மருந்தகத்தை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் வரும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வால்பாறையை அடுத்த வெள்ளமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதிக்கு சென்றுள்ள 8 யானைகள் அங்குள்ள மருந்தகத்தின் சுவரை முட்டி சேதப்படுத்தின.

மேலும் உள்ளே இருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் பொருள்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளா்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.