கோவையில் மீண்டும் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்

கோவையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் 5 இடங்களில் மீண்டும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

கோவையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் 5 இடங்களில் மீண்டும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் 17 இடங்களில் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றன. கோவையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவமனை, சூலூா் அரசு மருத்துவமனை, சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றன.

இந்நிலையில், தடுப்பூசி வழங்கும் பணிகள் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை முகாம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, கற்பகம் மருத்துவமனை, கிணத்துக்கடவு மற்றும் சமத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com