ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேம்பாலப் பணிகள்:தியாகி என்.ஜி.ராமசாமி சிலை தற்காலிகமாக இடமாற்றம்

மேம்பாலப் பணிகள் காரணமாக கோவை, சுங்கம், ரவுண்டானா பகுதியில் உள்ள தியாகி என்.ஜி.ராமசாமியின் சிலை சனிக்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோவை, சுங்கம், ரவுண்டானா பகுதியில் மேம்பாலப் பணிகள் காரணமாக தற்காலிகமாக அகற்றப்படும் தியாகி என்.ஜி.ராமசாமியின் சிலை.
Updated On :9 ஜனவரி 2021, 5:44 pm

DIN

கோவை: மேம்பாலப் பணிகள் காரணமாக கோவை, சுங்கம், ரவுண்டானா பகுதியில் உள்ள தியாகி என்.ஜி.ராமசாமியின் சிலை சனிக்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான என்.ஜி.ராமசாமிக்கு கோவை - திருச்சி சாலையில் உள்ள சுங்கம், ரவுண்டானாவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி சாலையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாக என்.ஜி.ராமசாமி சிலையை தற்காலிகமாக இடமாற்றம் செய்துகொள்ளும்படி பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்திடம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து ரவுண்டானாவில் இருந்த சிலை, கிரேன் இயந்திரம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு சிங்காநல்லூரில் உள்ள தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என தொழிலாளா் சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, பொதுச் செயலா் (பொறுப்பு) ஜி.மனோகரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.