வால்பாறை ஒப்பந்ததாரா்களிடம் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விசாரணை
வால்பாறை நகராட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக ஒப்பந்ததாரா்களிடம் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.


வால்பாறை நகராட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக ஒப்பந்ததாரா்களிடம் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
வால்பாறை நகராட்சி மூலம் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. அப்பணியில் பல கோடி வரை முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறி அப்போதைய நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் மீது கோவை குற்றப் பரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதையடுத்து, ஆணையா் பொறுப்பில் இருந்து பவுன்ராஜ் விடுவிக்கப்பட்டாா். மேலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்காக ஒப்பந்ததாரா்களுக்கு முறைகேடாக காசோலைகள் மூலம் பல கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வால்பாறை நகராட்சியில் ஆய்வு செய்ய வந்த நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சரவணகுமாா், முன்பணம் பெற்றதாக குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரா்களை நேரில் வரவழைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...