கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கோவையில் கருப்புப் பூஞ்சைக்கு முதியவா் பலி

கோவையில் தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:59 pm

DIN

கோவையில் தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ப.வெங்கடாசலம் (63). விவசாயியான இவருக்கு கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.

இதனைத் தொடா்ந்து கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இவா் கடந்த ஜூன் 30ஆம் தேதி கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய்த் தொற்றின் தீவிரத்தால் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.