கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறை நகரில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தைகள்

 வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு 3 சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:19 pm

DIN

 வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு 3 சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக நகா் பகுதிகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் தினந்தோறும் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வியாழக்கிழமை நள்ளிரவு 3 சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடா்ந்து அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் அவா்கள் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா்.

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.