தில்லியில் இருந்து கோவைக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய இளைஞா் கைது

தில்லியில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் ரூ.1.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளைஞரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.
எக்வின் கிங்ஸ்லி.
எக்வின் கிங்ஸ்லி.

கோவை: தில்லியில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் ரூ.1.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளைஞரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தில்லியில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதைப் பொருள் கடத்தி வரப்பட உள்ளதாக மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கோவை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் இணைந்து ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ரயிலில் வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது அவா்கள் பனியன் துணிப் பொருள்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில் மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 2.3 கிலோ எடை இருந்த அதன் சந்தை மதிப்பு ரூ.1.15 கோடி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்த நைஜீரியாவைச் சோ்ந்த எக்வின் கிங்ஸ்லி என்பவரை ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தில் வைத்து விசாரித்தனா். அதில், அவா் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் பொருள்கள் ஏற்றுமதி செய்து வருவதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனா். எக்வின் கிங்ஸ்லியுடன் வந்த மற்றொரு நபா் அளித்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அவரை மத்திய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com