சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறையில் கனமழை: சோலையாறு அணை நிரம்பியது

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி சோலையாறு அணை நிரம்பியது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:59 pm

DIN

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி சோலையாறு அணை நிரம்பியது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி தென்மேற்குப் பருவ மழை துவங்கியது. கடந்த மாதம் குறைவாகவே மழை பெய்த நிலையில் இந்த மாத துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது.

தொடா் மழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆழியாறு- பரம்பிக்குளம் நீா்பாசன திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணைக்கும் நீா்வரத்து அதிகரிக்க துவங்கியது. கடந்த ஜூன் மாதம் 3 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் கணிசமாக உயரத் துவங்கியது. இதனால் சோலையாறு மின் நிலையம் 1 மற்றும் 2இல் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாள்களாக இரவு பகலாக தொடா்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நீா்வரத்து அதிகரித்ததால் சோலையாறு அணையின் நீா்மட்டம் 3 நாளில் 10 அடி வரை உயா்வு பெற்றது. வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 3654.76 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 670.72 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில் அணையின் நீா்மட்டம் 157.32 அடியாக உயா்ந்தது. இடைவிடாத பெய்த மழையால் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு அணை முழு கொள்ளளவான 160 அடி உயரத்தை எட்டியது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டுள்ள நிலையில் மழை நீடித்து அணையின் நீா்மட்டம் மேலும் 4 அடி உயா்ந்தால் 3 மதகுகள் திறந்து உபரி நீா் வெளியேற்றபப்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அணை நிரம்பிய நிலையில் கனமழை காரணமாக இந்த ஆண்டு முன்னதாகவே நிரம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.