தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோட்டத் தொழிலாளா்களுக்கு தினக்கூலி ரூ.475 வழங்க வேண்டும் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 475 வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:24 am

DIN

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 475 வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தோட்டத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வால்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 346 தினக்கூலியை ரூ.475 ஆக உயா்த்தி வழங்க எஸ்டேட் நிா்வாகத்தினரிடம் கோரிக்கை வைப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வினோத்குமாா், செளந்திரபாண்டியன் (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யூ.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யூ.சி.), வீரமணி (விடுதலை சிறுத்தைகள்), கல்யாணி (எம்.எல்.எப்.), பரமசிவம் (சி.ஐ.டி.யூ.) உள்ளிட்ட 14 தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.