தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். இத்தகைய பணிகளில் ஈடுபடும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளா்களை ஊக்கத் தொகைக்கான பட்டியலில் பரிந்துரை செய்ய வேண்டாம் என உயா் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் கிடைக்கபெறுகின்றன. இது, தூய்மைப் பணியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும், முன்களப் பணிக்கான ஊக்கத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.