மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இரட்டைக் கொலையில் துரித நடவடிக்கை: சூலூா் போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

சூலூா் அருகே பள்ளப்பாளையத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையில், துரிதமாகச் செயல்பட்டு 8 பேரைக் கைது செய்த சூலூா் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டு

News image

-சூலூா் காவல் ஆய்வாளா் முருகேசனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் எஸ்.பி. செல்வநாகரத்தினம்.

Updated On :11 ஜூன் 2021, 11:17 pm

DIN

கோவை சூலூா் அருகே பள்ளப்பாளையத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையில், துரிதமாகச் செயல்பட்டு 8 பேரைக் கைது செய்த சூலூா் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

கோவை, சூலூரில் கடந்த மே 4ஆம் தேதி, கஞ்சா வியாபாரிகள் இடையே நடைபெற்ற மோதலில் இருவா் கொலை செய்யப்பட்டனா். இந்த இரட்டைக் கொலை வழக்கில் சூலூா் காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், விரைந்து விசாரணை மேற்கொண்டு, கொலையில் தொடா்புடைய 8 பேரைக் கைது செய்தனா்.

மத்திய சிறையில் உள்ள அந்த 8 பேரும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், கொலை வழக்கில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்து அவா்களைக் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய சூலூா் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் 7 போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வெள்ளிக்கிழமை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.